தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எரிவாயு சிலிண்டரில் விழிப்புணர்வு ஸ்டிக்கரை ஒட்டி தேர்தல் விழிப்புணர்வு - Awareness in the gas cylinder

திருவள்ளூர்: மாவட்டத்தில் 100 சதவிகித வாக்குப்பதிவை உறுதி செய்ய வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு திரைப்படங்களை பொதுமக்களுக்கு திரையிட்டு அம்மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

எரிவாயு சிலிண்டரில் விழிப்புணர்வு ஸ்டிக்கரை ஒட்டி தேர்தல் விழிப்புணர்வு  ஒட்டிய  மாவட்ட ஆட்சியர் பொன்னையா
எரிவாயு சிலிண்டரில் விழிப்புணர்வு ஸ்டிக்கரை ஒட்டி தேர்தல் விழிப்புணர்வு ஒட்டிய மாவட்ட ஆட்சியர் பொன்னையா

By

Published : Mar 14, 2021, 1:31 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் 100 சதவிகித வாக்குப்பதிவை உறுதி செய்ய வலியுறுத்தி எரிவாயு சிலிண்டரில் விழிப்புணர்வு ஸ்டிக்கரை ஒட்டியும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மின்னணு விளம்பர் வாகனத்தில் திரையிடப்படும் தேர்தல் விழிப்புணர்வு திரைப்படங்களை பொதுமக்களுக்கு திரையிட்டு அம்மாவட்ட ஆட்சியர் பொன்னையா விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

நடைபெறவுள்ள 2021 சட்டமன்றத் தேர்தலில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 100 சதவிகித வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் எரிவாயு சிலிண்டரில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியில் எரிவாயு சிலிண்டரில் விழிப்புணர்வு ஸ்டிக்கரை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கும் ஊழியர்களிடமும், பொதுமக்களிடமும் எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதனைத் தொடரந்து திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் மின்னணு விளம்பர வாகனத்தில் திரையிடப்படும் தேர்தல் விழிப்புணர்வு திரைப்படங்களை பொதுமக்களுக்கும், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கும் திரையிட்டு காண்பித்தும், மாவட்ட ஆட்சியர் பொன்னையா விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் திரையிடுவதற்காக அந்த வாகனத்தை அனுப்பி வைத்தார்.

இதையும் படிங்க:உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 5 லட்சம் ரூபாய் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details