தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில் கட்ட மண் அள்ளியபோது முதுமக்கள் தாழி கண்டெடுப்பு - திருத்தணியில் முதுமக்கள் தாழி

திருவள்ளூர்: திருத்தணி அருகே பல நூற்றாண்டுகளைக் கடந்த மண்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டன.

mana
mana

By

Published : May 27, 2020, 1:38 PM IST

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே திருவலாங்காடு ஒன்றியத்திற்குள்பட்ட பழையனூர் கிராமத்தில் கோயில் கட்ட அங்கிருந்த பொதுமக்களால் முடிவுசெய்யப்பட்டது.

இதற்காக அங்கிருந்த ஏரியிலிருந்து மண் அள்ளுவதற்கு கிராம இளைஞர்கள் பள்ளம் தோண்டினர். அப்பொழுது பழங்கால முதுமக்கள் தாழி, மண்பாண்டங்கள், தண்ணீர் பிடிக்கும் குவளைகள் உள்ளிட்டவை கிடைத்துள்ளன.

முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

இப்பொருள்களைப் பத்திரமாக மீட்ட மக்கள் பின் கிராம நிர்வாக அலுவலருக்குத் தகவல் அளித்தனர். இந்தப் பொருள்களை தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொள்ளுவதற்கும் மண்பாண்டங்களை அறிவியல் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கவும் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: மது வாங்க வந்தவர்களை விரட்டியடித்த பெண்கள்: குடிமகன்களுக்குப் பாதுகாப்பு கொடுத்த போலீஸ்!

ABOUT THE AUTHOR

...view details