தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிசை வீட்டில் தீ விபத்து - முதியவர் உயிரிழப்பு - Elderly person died in fire at Tiruvallur

திருவள்ளூர்: பொன்னேரியில் குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் முதியவர் உயிரிழப்பு
குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் முதியவர் உயிரிழப்பு

By

Published : Jan 21, 2020, 8:44 PM IST

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (70). முதியவரான இவர் தனியார் பள்ளி ஒன்றில் தோட்ட வேலை பார்த்துவந்தார்.

இன்று அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவரது குடிசை வீடு தீப்பற்றி எரிந்துள்ளது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கும், காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்தனர். எனினும் குடிசை வீடு முற்றிலும் எரிந்து சேதமானது.

தகவலறிந்து வந்த காவல் துறையினர் வீட்டினுள் பலத்த தீக்காயங்களுடன் இருந்த முதியவரை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் முதியவர் உயிரிழப்பு

இதையும் படிங்க:பட்டியலின இளைஞரை தீவைத்து எரித்த கும்பல்!

ABOUT THE AUTHOR

...view details