திருவள்ளூர்: ஆரம்பாக்கம் அருகே தமிழக - ஆந்திர எல்லையில் அமைந்துள்ள எளாவூர் நவீன சோதனைச் சாவடியில் வாகனங்களுக்கு உரிமம் வழங்குவதில் போக்குவரத்துத்துறை அலுவலர்கள் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி குமரவேல் தலைமையில், அதிகாலை 3 மணி முதல் காலை 9 மணி வரை (6 மணி நேரம்) லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில் கணக்கில் வராத பணம் சிக்கியது.
எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி - லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் சிக்கிய பணம் - லஞ்ச ஒழிப்பு போலீசார்
தமிழ்நாட்டில் இருந்து ஆந்திரா நோக்கி செல்லக்கூடிய வாகனங்கள், ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்குள் வரும் வாகனங்கள் உரிமம் பெற வேண்டி சமர்ப்பித்த விண்ணப்பங்கள், அதற்கு அளிக்கப்பட்ட பெர்மிட் விவரங்கள் சேகரிக்கப்பட்டு கட்டண தொகை விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டதில், கணக்கில் வராத 2 லட்சத்து 7 ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
Elavur toll gate - bribing case
தமிழ்நாட்டில் இருந்து ஆந்திரா நோக்கி செல்லக்கூடிய வாகனங்கள், ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்குள் வரும் வாகனங்கள் உரிமம் பெற வேண்டி சமர்ப்பித்த விண்ணப்பங்கள், அதற்கு அளிக்கப்பட்ட பெர்மிட் விவரங்கள் சேகரிக்கப்பட்டு கட்டண தொகை விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டதில், கணக்கில் வராத 2 லட்சத்து 7 ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இது குறித்து தொடர்புடைய அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.