தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமண விழாவில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு - அதிமுக

திருவள்ளூர் அருகே நடைபெற்ற அதிமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.

இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

By

Published : Nov 11, 2022, 12:08 PM IST

திருவள்ளூர் அடுத்த போளிவாக்கத்தை சேர்ந்த அதிமுக பிரமுகரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான பி.மணி- பூங்காவனம் தம்பதி மகன் கலைச்செல்வன் (எ)சத்யாவுக்கும், ஸ்ரீபிரியாவுக்கும் திருவள்ளூர் அடுத்த மணவாள நகரில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று(நவ.11) திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று(நவ.10) திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிச்சாமி நேரில் வாழ்த்து தெரிவிக்க வருகை தந்தார். அவருக்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பி வி ரமணா தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மணமக்களை வாழ்த்திய அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

அதனைத் தொடர்ந்து திருவள்ளூரில் உள்ள பிரசித்தி பெற்ற வைத்திய வீரராகவர் பெருமாள் கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை செலுத்தி வரவேற்றனர். அதனையடுத்து மணமக்களை ஆசீர்வதித்த அவர் கூடி இருந்த தொண்டர்களிடம் உற்சாகமாக கையசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இதில் முன்னாள் அமைச்சர்கள், உள்ளிட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதையும் படிங்க:தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவராக தன்ராஜ் தேர்வு

ABOUT THE AUTHOR

...view details