இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியாகவும், உயிர்த்தெழுந்த மூன்றாம் நாளை ஈஸ்டர் திருநாளாகவும் அனுசரித்தும் கொண்டாடியும்வருகின்றனர்.
இந்நிலையில், திருவள்ளூர் ஜே.என். சாலையில் அமைந்துள்ள புனித ஃபிரான்சிஸ் சலோசியர் ஆலயத்தில் நள்ளிரவில் நடைபெற்ற இயேசு கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழா திருப்பலியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதில், பக்தர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். சிறப்புப் திருப்பலியின் தொடக்கமாக இயேசு உயிர்த்தெழுந்ததை உணர்த்தும் வகையில் பாஸ்கா ஒளி ஏற்றப்பட்டது.
ஈஸ்டர் பண்டிகை சிறப்பு வழிபாடு இது குறித்து ஆலயத்தின் பங்குத்தந்தை கூறியதாவது, "இந்த ஆலயம் 60 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. இந்த ஈஸ்டர் பெருவிழாவின் நோக்கம் இயேசு கிறிஸ்து மனிதராக இந்த உலகத்தில் பிறந்து அன்பு, பாசம், இரக்கம் தியாகம் போன்றவற்றைப் போதித்து உயிர்த் தியாகம் செய்தார்.
அதைத் தொடர்ந்து மூன்றாம் நாள் உயிர்ப்பித்து இன்றுவரையிலும் நம்முடன் இருந்துவருகிறார். அதைக் கொண்டாடும்விதமாக இவ்விழாவை நாம் வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறோம்" என்றார்.