திருவள்ளூர்: ஜூலை 17 ஆம் தேதி இரவு, மணவாள நகரில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர், வெள்ளை நிற காரில் படுவேகமாக சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
பறந்து சென்ற கார்
அப்போது மணவாளநகர் சிக்னலில் இருந்து இடதுபுறமாக செல்லவேண்டிய கார், எதிர் திசையான வலது புறத்தில் படு வேகமாக சீறிக்கொண்டு சென்றது.
அப்போது அந்தப் பகுதியில் நடைப் பாதையில் சென்று கொண்டிருந்த 5 பேர் மீது மோதி கார் மின்னல் வேகத்தில் சென்றது.
மடக்கிப் பிடித்த மக்கள்
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு காரை விரட்டிச்சென்று, ஒண்டிகுப்பம் என்ற பகுதியில் மடக்கிப் பிடித்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்கள்.
குடிபோதையில் தாறுமாறாக காரை இயக்கி விபத்து பின்னர் காருக்குள் மது போதையில் இருந்தவரை அடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து காவல் துறையினர் விசாரித்த போது, அவர் மணவாள நகர் பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பது தெரியவந்தது.
இது தொடர்பாக மணவள நகர் காவல் நிலைய காவல் துறையினர், பாலாஜி மீது, குடித்துவிட்டு வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: தனியார் நிறுவன காவலாளி கொலை