தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஓட்டுநர் மீது பாய்ந்த போக்சோ! - Driver arrested for pocso act in thiruvallur

திருவள்ளூர்: பொன்னேரியில் நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வேன் ஓட்டுநரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

sexual abusement

By

Published : Nov 1, 2019, 10:03 AM IST

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள தனியார் பள்ளியில் வேன் ஓட்டுநராகப் பணிபுரிந்துவருபவர் ராமன் (37). இவர் தினமும் எல்கேஜி படிக்கும் குழந்தைகளைப் பள்ளிக்கு வேனில் ஏற்றிச் செல்வது வழக்கம்.

அப்போது, எல்கேஜி படிக்கும் நான்கு வயது சிறுமிக்கு ஓட்டுநர் ராமன் தினமும் பாலியல் தொல்லை கொடுத்துவந்துள்ளார். இது குறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, அவர்கள் பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் ஓட்டுநர் ராமனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படடிங்க:ஆறு வயது குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்த இருவர் போக்சோவில் கைது

ABOUT THE AUTHOR

...view details