ஆந்திரா மாநிலத்திற்கு சுற்றுலாவிற்கு சென்றுவிட்டு சென்னை நோக்கி திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பெரியபாளையம் சாலையில் வேகமாக கார் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அப்போது கார் நிலைதடுமாறி அருகில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளனது.
கார் விபத்து: 4 பேர் படுகாயம் - படுகாயம்
திருவள்ளூர்: குடிபோதையில் காரை ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் காரில் பயணித்த நான்கு போ் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோப்புக்காட்சி
விபத்து குறித்து தகவல் அறிந்த ஊத்துக்கோட்டை காவல்துறையினர் நான்கு பேரையும் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அதில் காரில் வந்தவர்கள் சென்னை சர்மா நகரைச் சேர்ந்தவர்கள் என்றும் குடித்து விட்டு காரை ஓட்டி வந்ததும் தெரியவந்தது. இவர்கள் ஆந்திர மாநிலத்திற்கு சுற்றுலா சென்று விட்டு சென்னைக்கு வீடு திரும்பும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.