தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடற்கரையில் குடிக்காதே...! மது அருந்துபவர்களை தடுக்கக்கோரி இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்! - மது அருந்துபவர்களை தடுக்க கோரி இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: பழவேற்காடு கடற்கரையில் மது, போதை பொருட்களை பயன்படுத்தும் சமூக விரோதிகளை கண்டித்து இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடற்கரையில் இளைஞர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்
கடற்கரையில் இளைஞர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்

By

Published : Nov 30, 2019, 11:28 PM IST

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கடற்கரையானது மிகவும் தூய்மையான கடற்கரையாக இருந்து வருகிறது. இங்கு, நாள்தோறும் பல்வேறு இடங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், இந்த கடற்கரையில் சமூக விரோதிகள் சிலர் தினம்தோறும் மது, போதை வஸ்துக்களை பயன்படுத்திகொண்டு அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொள்வது வழக்கமாகி வருகிறது.

கடற்கரையில் இளைஞர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்

இதனை கண்டித்து அப்பகுதி இளைஞர்கள் மது பாட்டில்களை மணலில் அடுக்கி, கடற்கரையில் குடிக்காதே எனும் வடிவத்தை அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இந்த சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இரவு நேரங்களில் கடற்கரையில் உள்ள மின் விளக்குகள் எரியாததால், அப்பகுதி அச்சுறுத்தும் விதமாக இருந்து வருகிறது. இதனால், மின் விளக்குகளை உடனடியாக சரி செய்து கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

இதையும் படிங்க: கோத்தபய வருகைக்கு எதிராக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..!

ABOUT THE AUTHOR

...view details