திருவள்ளூர் மாவட்டத்தில் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட செல்போன்களை கண்டுபிடித்து அதற்கான உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு குற்ற வழக்குகள் மற்றும் வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் தொலைந்து போன 140 செல்போன்களை சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் மனோஜ் பிரபாகர் தலைமையில் காவல்துறையினர் கண்டறிந்து அந்த செல்போன்கள் இன்று உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
செல்போன் வழிப்பறி வழக்கில் இதுவரை 61 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மொத்த மதிப்பு 7 லட்சம் ரூபாய் ஆகும். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், மாவட்ட காவல் இணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் வேண்டுகோள் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் பேசுகையில், '' தங்களது செல்போன்களை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதே சமயம் தொலைந்து போனால் உடனடியாக காவல் துறையிடம் வழக்குப்பதிந்து அதற்கான ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். அதே போன்று இரண்டாம் முறையாக வேறு ஒரு நபரிடம் இருந்து செல்போனை வாங்கும்போது உரிய ரசீது பெற்று வாங்க வேண்டும்'' என வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க:கரோனாவுக்கு எதிரான போரில் எத்தனை காவலர்கள் உயிரிழந்தார்கள்? - பதிலளிக்கிறார் அமித் ஷா