தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாழடைந்த கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி: உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள் - தவறி விழுந்த நாய்க்குட்டி

திருவள்ளூர்: பாழடைந்த 60 அடி கிணற்றில் தவறி விழுந்த நாய்க்குட்டியை, தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

நாய்க்குட்டி மீட்பு
நாய்க்குட்டி மீட்பு

By

Published : May 31, 2021, 10:44 AM IST

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்தி குப்பத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார். நாய்கள் மீது அலாதி பிரியம் கொண்ட இவர், ஓரிரு நாட்டு நாய்களை வளர்த்து வருகிறார். இதில் இரண்டு நாய்க்குட்டிகள் நேற்று (மே.30) காலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தன.

பாழடைந்த கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி

அதில் ஒரு நாய்க்குட்டி, வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், வினோத்குமார் அதனை தேடியுள்ளார். அப்போது, வீட்டின் அருகேயிருந்த பாழடைந்த 60 அடி கிணற்றில் நாய்க்குட்டி தவறி விழுந்தது தெரியவந்தது. இதையடுத்து, வினோத்குமார் சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலருக்கு தகவல் தெரிவித்தார்.

நாய்க்குட்டி மீட்பு

நாய்க்குட்டி மீட்பு

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிப்காட் தீயணைப்புத்துறையினர், நாய்க்குட்டியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். முட்புதர் படர்ந்து, இருண்டு கிடந்த அந்த கிணற்றினுள் இறங்கிய தீயணைப்புத்துறையினர், நாய்க்குட்டியைப் பத்திரமாக மீட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details