திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர், பிரதமரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டப்பணிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மருத்துவமனை மருத்துவர்களும், ஊழியர்களும் கைகளில் பதாகைகளை ஏந்தி நடைபயணமாக சென்று விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.
'காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சம் வரையிலான அறுவை சிகிச்சை'- மருத்துவர்கள் தகவல்!
திருவள்ளூர் : முதலமைச்சர், பிரதமர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பயனை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் அரசு மருத்துவமனை மருத்துவர்களும், ஊழியர்களும் நடைபயணமாக பேரணி சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மருத்துவர்கள் நடத்திய அரசு காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு
விழிப்புணர்வில் மருத்துவமனை ஊழியர்கள் கூறியதாவது ; தற்போது ஐந்து லட்ச ரூபாய் வரையிலும் நோயாளிகள் அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம் என்றும்; பல்வேறு பிரச்னைகளுக்கு காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம் என்பது குறித்தும் மற்ற மாநிலங்களைச் சார்ந்தவர்களும் இதில் பயன் பெறலாம் என்றும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க : 'ஏழை மக்களுக்கு மருத்துவ வசதிகள் கிடைத்திடவே மருத்துவ காப்பீடு திட்டம்' - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்