மத்திய அரசு சமீபத்தில் ஆயுர்வேத மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இதனால் மருத்துவர் துறைகளுக்குள் கலப்படம் ஏற்பட்டு, மக்களிடையே குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஆயுர்வேத மருத்துவ முறையில் அறுவை சிகிச்சைக்கான மயக்க மருந்துகளும், வலி நிவாரணிகளும் இல்லாத காரணத்தால் இதய நோயாளிகளுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும். அத்துடன் உயிரிழப்புகளையும் உண்டாக்கலாம்.
நம் நாட்டின் பாரம்பரிய மருத்துவமுறைகளில் ஒன்றாக ஆயுர்வேதம் இருக்கிறது. இந்த அரசாணையால் அதன் தனித்துவத்தை இழந்து விடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
சரியான பயிற்சியும், தேவையான அடிப்படை அனுபவமும் இல்லாமல் ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டால் பல உயிர் இழப்புகளையும், நோயாளிகளுக்கு தேவையில்லாத பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இதனால் உலக அளவில் நம் நாட்டின் மருத்துவத்துறை, மருத்துவர்களின் மீதும் உள்ள நன்மதிப்பு குறைந்து நம் நாட்டின் பொருளாதாரம் சீர் கெடுவதற்கு காரணமாக அமையும்.
மருத்துவர்கள் சங்கம் போராட்டம் எனவே மத்திய அரசு உடனடியாக இந்த அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன உரையாற்றினர்.
இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், மருத்துவ சங்க செயலாளர் விஜயராஜ் பொருளாளர் பிரேம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதையும் படிங்க: கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறி வரும் தென்காசி!