தமிழ்நாடு

tamil nadu

'கரோனா குறைவது மகிழ்ச்சிதான்... இனிமேல்தான் ஜாக்கிரதையா இருக்கணும்'

By

Published : Oct 22, 2020, 10:37 PM IST

திருவள்ளூர்: கரோனா பாதிப்பு குறைவது மகிழ்ச்சியளித்தாலும், இனிவரும் பருவகாலங்களில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என மருத்துவக் கல்லூரி முதல்வர் அரசி தெரிவித்துள்ளார்.

arasi
arasi

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த பத்து நாள்களாக கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட மருத்துவ கல்லூரி முதல்வர் அரசி கூறியதாவது, "கரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவது மகிழ்ச்சி அளித்தாலும் இனிவரும் காலங்களில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பருவமழை காலத்தில் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளன.

தொற்று பரவினால் அது மிகுந்த ஆபத்தை விளைவிக்கும். டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கரோனா தொற்றால் இதுவரை 650 பேர் இறந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 2 ஆயிரம் பேர் வரை அனுமதிக்கப்பட்டு, அதில் வெறும் 25 நபர்கள் மட்டுமே உயிரிழந்துள்ளனர். மற்ற அனைவரும் பூரண குணமடைந்து பாதுகாப்பாக வீட்டிற்கு சென்றுள்ளனர்" என்றார்.

இதையும் படிங்க:மீனாட்சி கோயிலில் 6ஆம் நாள் நவராத்திரி விழா!

ABOUT THE AUTHOR

...view details