தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளூரில் 172 இடங்களைக் கைப்பற்றிய திமுக! - திருவள்ளூர் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்

திருவள்ளூர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட திமுக 172 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மை வெற்றியைத் தனதாக்கியுள்ளது.

திருவள்ளூர் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பான காணொலி
திருவள்ளூர் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பான காணொலி

By

Published : Feb 22, 2022, 7:30 PM IST

திருவள்ளூரில் உள்ள 315 வார்டு வேட்பாளர்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இன்று (பிப்ரவரி 22) நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி 172, அதிமுக கூட்டணி 40 இடங்களைக் கைப்பற்றியுள்ளன.

இதில் ஆவடி மாநகராட்சி, திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி, பள்ளிப்பட்டு, கும்மிடிப்பூண்டி, ஆரணி, ஊத்துக்கோட்டை, மீஞ்சூர், நாரவாரிக்குப்பம், திருமழிசை உள்ளிட்டவற்றில் திமுக பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ளது.

திருவள்ளூர் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பான காணொலி

பொதட்டூர்பேட்டை பேரூராட்சியினை மட்டும் அதிமுக கைப்பற்றியுள்ளது. தனித்துப் போட்டியிட்ட பாஜக ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை. அதிமுகவுக்கு நிகராக, சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றிபெற்றுள்ளனர்.

காங்கிரஸ் எட்டு இடங்களிலும், விடுதலைச் சிறுத்தைகள் இரண்டு இடங்களிம், மதிமுக மூன்று இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியதால் திமுகவினர் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க:சிவகங்கை: வெற்றிபெற்ற முதல் இளம் காங்கிரஸ் பெண் வேட்பாளர்

ABOUT THE AUTHOR

...view details