திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டார். பிரச்சாரத்தின் போது பேசிய அவர், "திமுக ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தண்டனையை நிறைவேற்ற தீர்மானம் நிறைவேற்றி விட்டு, இப்போது பொய் கூறிவருகிறது. ஏழு பேர் விடுதலை குறித்து அதிமுகதான் தீர்மானம் நிறைவேற்றியது. திமுக இரட்டை வேடம் போடுகிறது, மக்களை ஏமாற்றுகிறது.
தமிழ்நாட்டில் ஏழை என்ற சொல் எதிர்காலத்தில் இருக்காது. ஏழைகளுக்கு வீடில்லாத நிலை எதிர்காலத்தில் இருக்காது. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் யாரும் நிம்மதியாக இருக்க முடியாது. பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது. திமுக ஆட்சியில் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.