திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை, புட்லூர் ஆகிய இடங்களில் ரயில் மேம்பாலங்கள் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளன. இதனைக் கண்டித்து திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனை திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக ஒன்றிய செயலாளர் ஜெயசீலன் ஏற்பாடு செய்தார். இதில் திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ஆவடி சாமு நாசர், பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினர் கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ஆவடி சாமு நாசர் பேசுகையில், "திருவள்ளூர் மாவட்டத்தில் திமுக ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட ரயில்வே மேம்பாலம் திட்டம் பத்து வருடங்களாக பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன.