கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தினசரி வேலைக்குச் சென்று கொண்டிருந்த மக்கள் வீட்டில் முடங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால், பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பல்வேறு தரப்பினர் மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்.
ஊரடங்கால் முடங்கிக் கிடக்கும் ஆயிரம் குடும்பங்கள் அந்த வகையில், திருவள்ளூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன், தெற்கு மாவட்டச் செயலாளர் நாசர் ஆகியோர் இணைந்து கைவண்டூர் பகுதியில் உள்ள 800 குடும்பங்களுக்கும், பூண்டி பகுதியில் உள்ள 100 குடும்பங்களுக்கும்,100 ஆட்டோ ஓட்டுநர் குடும்பங்களுக்கும் என மொத்தம் ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில், மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தது மட்டுமின்றி முகக்கவசங்கள் அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'ஆயிரம் பேரையே கவனிக்கல... லட்சம் பேரை எப்படி காப்பாற்றுவாங்க' - ஸ்டாலின் வேதனை!