தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருத்தணியில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை - போலீசார் தீவிர விசாரணை! - Mohan

திருத்தணியில் திமுக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருத்தணியில் திமுக பிரமுகர் வெட்டி படுகொலை - போலீசார் தீவிர விசாரணை!
திருத்தணியில் திமுக பிரமுகர் வெட்டி படுகொலை - போலீசார் தீவிர விசாரணை!

By

Published : Aug 9, 2022, 10:27 AM IST

திருவள்ளூர்மாவட்டம் திருத்தணி ஜெஜெ நகரில் மோகன் என்பவர் வசித்து வந்தார். திமுக உறுப்பினரான இவர், நேற்றிரவு 10 மணியளவில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இவரது பின்னால் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர், மோகனின் முகம் மற்றும் உடலில் கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து தாக்குதல் நடத்திய மர்ம கும்பல், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. பின்னர் அந்த இடத்தில் உயிருக்கு போராடி வந்த மோகனை அவ்வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர்கள், பொதுமக்களுக்கும் மோகனின் உறவினர்களுக்கும் காவல்துறைக்கும் தகவல் அளித்துள்ளனர்.

உடனடியாக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட மோகன், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருத்தணி சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக திருத்தணி - அரக்கோணம் சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் கொலையாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அதேநேரம் உயிரிழந்த மோகன், மதுபான விற்பனை வழக்கில் திருத்தணி காவல் நிலையத்தின் பழைய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:திருமணம் செய்ய மறுத்த காதலனை வெட்டி சூட்கேஸில் எடுத்துச்சென்ற காதலி!

ABOUT THE AUTHOR

...view details