பசுமை ஆவடி திட்டத்தின் கீழ் ஆவடி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட திருநின்றவூர், பட்டாபிராம், ஆவடி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள குளங்களை தூர்வாரி அழகுபடுத்தும் பணியில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் ஈடுபட்டு வருகிறார். இதற்காக இன்று ஆவடியில் உள்ள சேக்காடு சிரத்தம்மன் கோயில் குளம் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.
பால் விலை உயர்வு பற்றி பேச திமுகவிற்கு அருகதை கிடையாது - அமைச்சர் பாண்டியராஜன் காட்டம் - Minister K. Pandiarajan
திருவள்ளூர்: ஆவின் பால் விலை உயர்வு பற்றி பேச திமுகவிற்கு அருகதை கிடையாது என்று அமைச்சர் பாண்டியராஜன் காட்டமாக தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஆவின் பால் உயர்வு தவிர்க்க முடியாத ஒன்று. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். திமுக ஆட்சியில் இருக்கும் போது எதையும் சரிசெய்யாமல் தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும்போது அரசை குறை கூறி வருவதாகவும் பால் உயர்வு பற்றி பேச திமுகவிற்கு அருகதை கிடையாது என்றும் சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலை தூர கல்வி முதுகலை படிப்பில் தமிழ் மொழி பாடப்பிரிவு நீக்கப்பட்டது என்பன போன்ற எந்த தகவலும் உண்மை இல்லை என்று விளக்கமளித்தார். இது குறித்து காமராஜர் பல்கலைக்கழக முதல்வர் தன்னை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும், அவருடன் பேசி இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.