தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெட்ரோல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? : எல்.முருகன் - bjp leader l murugan

திருவள்ளூர்: திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை குறைக்கப்படும் என கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், விலையை குறைக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் வாக்குறுதிகள் கூறியப்படி திமுக செய்யவில்லை :  எல்.முருகன்
தேர்தல் வாக்குறுதிகள் கூறியப்படி திமுக செய்யவில்லை : எல்.முருகன்

By

Published : Jun 12, 2021, 8:11 PM IST

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் பாஜகவின் சார்பில் கரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட எல். முருகன், அங்குள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இரண்டு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள், ஐந்து படுக்கைகள், , பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, காய்கறிகள் ஆகியவை வழங்கினார்.

பின்னர், எல். முருகன், செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ’’கடந்த கரோனா முதல் அலையின் போது, எதிர்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் எனக்கூறி போராட்டம் நடத்தினார். திமுக ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகள், சாராய ஆலைகள் மூடப்படும் எனவும் தெரிவித்தனர். தற்போது, ஆட்சிக்கு வந்தவுடன் அதை மறந்துவிட்டார். திமுக சொல்வது ஒன்றும், செய்வது ஒன்றுமாக உள்ளது.

மத்திய அரசு ஒன்றிய அரசியல்ல, பேரரசு என கூறினார். சட்டப்புத்தகத்தில் ஒன்றிய அரசு என இல்லை என்றும் அவர் கூறினார்.

பெட்ரோல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? : எல்.முருகன்

திமுக ஆட்சிக்கு வந்தால் நான்கு ரூபாய் பெட்ரோல் விலை குறைப்பு என கூறியவர். இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை.

கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு அகற்றப் படவேண்டும் எனறும், இணையதள வாயிலாக கண்காணிக்க வேண்டும். கோயில் சொத்துக்கள் தங்கம் வெள்ளி சிலைகள் பஞ்சலோக சிலை அனைத்தையும் கண்காணிக்க வேண்டும். ஆகம விதிகள் தெரிந்தவர்கள் யாராக இருந்தாலும் அர்ச்சகர்கள் ஆகலாம்’’ எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகள் கரோனா தடுப்பூசி முகாம்: நகராட்சி ஆணையர் ஆய்வு!

ABOUT THE AUTHOR

...view details