தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளூரில் திமுக பிரமுகர் வெட்டி கொலை - திருவள்ளூரில் திமுக பிரமுகர் வெட்டி கொலை

திருவள்ளூர்: வெள்ளவேடு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த திமுக பிரமுகர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

DMK cadre
DMK cadre

By

Published : Feb 2, 2021, 10:18 PM IST

பூந்தமல்லி திமுக மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் கருணாகரன். இவர், திருவள்ளூர் மாவட்டம், வெள்ளவேடு பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் வந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் வழி மறித்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.

இதில் படுகாயம் அடைந்த கருணாகரன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த வெள்ளவேடு காவல்துறையினர் சம்பவ இடத்தில் கிடந்த கருணாகரன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், முன்பகையால் இக்கொலை சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர்.

இருப்பினும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேல்மனம் பேடு திமுக ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜ் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அதே பகுதியைச் சேர்ந்த அவரது மைத்துனரான கருணாகரன், தற்போது அடையாளம் தெரியாத கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details