திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. 41 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ரெட் அலெர்ட் அறிவிக்கப்பட்டுள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு கடுமைப் படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பள்ளிப்பட்டு அருகே அத்திமாஞ்சேரி, கரும்பாக்கம், ஆகிய பகுதிகளில் வசித்து வரும் 45 இருளர் இன குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கரோனா வைரஸ் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்ததால் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் அரிசி,பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை அவர்களுக்கு வழங்கினார்.