தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் திருவள்ளூர் ஆட்சியர்! - tiruvallur district news

திருவள்ளூர்: மாவட்ட தலைமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா உள்ளிட்டோர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் மாவட்ட ஆட்சியர் பொன்னையா
கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் மாவட்ட ஆட்சியர் பொன்னையா

By

Published : Feb 4, 2021, 12:04 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி போடும் முகாம் கடந்த 16ஆம் தேதிமுதல் நடைபெற்றுவருகிறது. முதலில் முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் கட்டமாக நேற்று (பிப். 3) வருவாய்த் துறை, காவல் துறையைச் சார்ந்தவர்களுக்குத் தடுப்பூசி போடும் முகாம் தொடங்கியது.

திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துச்சாமி ஆகியோர் கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டனர்.

ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டத்தில் 6 மையங்களில் கரோனா தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. இந்நிலையில் அனைத்து ஒன்றியங்களிலும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்தார்.

மேலும் அடுத்தகட்டமாக 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போடப்படும் எனவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சிவனருள்!

ABOUT THE AUTHOR

...view details