தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அத்தியாவசிய பொருள்கள் தரும் நிகழ்ச்சி - மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

திருவள்ளூர்: நியாயவிலைக் கடையில் ரூபாய் 500 மதிப்பிலான மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பு பைகள் விற்பனை செய்யும் நிகழ்ச்சியினை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

அத்தியாவசிய பொருட்கள் தரும் நிகழ்ச்சி
அத்தியாவசிய பொருட்கள் தரும் நிகழ்ச்சி

By

Published : Apr 22, 2020, 4:50 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏழை எளிய மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக ரூபாய் 500 விலையில் மளிகைப் பொருள்கள் தொகுப்புகளை கூட்டுறவு நியாய விலைக் கடைகள் மூலம் வழங்க தமிழ்நாடு அரசினால் ஆணையிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து இன்றைய தினம் திருவள்ளூர் நகரில் அமைந்துள்ள மா.பொ.சி நியாயவிலைக் கடையில் ரூபாய் 500 மதிப்பிலான மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பு பைகள் விற்பனை செய்யும் நிகழ்ச்சியினை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தொடங்கி வைத்தார்.

இந்த மாவட்டத்தில் 32 ஆயிரம் அட்டைதாரர்களுக்கு விற்பனை செய்ய தொகுப்பு பை தரப்பட்டுள்ளது. 500 ரூபாய் மதிப்பில் குறைந்த விலையில் மளிகைப் பொருள்கள், துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகு, எண்ணெய், உள்ளிட்ட 19 வகையான அத்தியாவசிய பொருட்கள் அடங்கியுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் தரும் நிகழ்ச்சி

இதன் வெளிச்சந்தை விலை குறைந்தது 600 ரூபாய் ஆகும் ஆனால் தமிழ்நாடு அரசின் சார்பாக ரூபாய் 500 க்கு வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க: கரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முதல்கட்ட ஆராய்ச்சி வெற்றி - சுதா சேஷையன்

ABOUT THE AUTHOR

...view details