திருவள்ளூர் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்குள்பட்ட மாங்காடு பேரூராட்சி பகுதிகளில் மட்டும் கரோனா பாதிப்பு நூற்றுக்கும் மேல் உள்ளதால் ஊரடங்கு தளர்வுக்குப் பின் மேலும் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க இந்தப் பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டு தடுப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேற்று (ஜூன் 10) இந்தப் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விதிமுறைகளை மீறி செயல்பட்ட முடித்திருத்தும் கடை, மின்பொருள் கடை, மளிகைக் கடை உள்ளிட்ட 10 கடைகளுக்குச் சீல்வைத்தார்.
அது மட்டுமன்றி இருசக்கர வாகனம், ஆட்டோக்களில் முகக்காப்பு இன்றி வலம்வந்தவர்களுக்கு அறிவுரை வழங்கியதோடு வாகனங்களைப் பறிமுதல்செய்து அபராதம் விதித்தார்.