தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பூண்டி நீர்த்தேக்கத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு - Boondi lake

திருவள்ளூர்: பூண்டி சத்யமூர்த்தி நீர்த்தேக்கம் மற்றும் பூண்டி அணை நீர்நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கிஸ் இன்று (ஜூன் 30) ஆய்வு மேற்கொண்டார்.

பூண்டி நீர்த்தேக்கத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
பூண்டி நீர்த்தேக்கத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

By

Published : Jun 30, 2021, 4:33 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கிய நீர் தேக்கமாக பூண்டி சத்யமூர்த்தி நீர்த்தேக்கம் உள்ளது. ஆந்திர மாநிலத்திலிருந்து வரும் கிருஷ்ணா நதி நீர் மற்றும் மழை ஆகியவற்றை சேமித்து, பூண்டி நீர் தேக்கத்திலிருந்து செம்பரம்பாக்கம், செங்குன்றம், சோழவரம் ஆகிய ஏரிகளுக்கு நீர் அனுப்பப்பட்டு சென்னை மக்களின் குடிநீருக்காக பயன்படுத்தப்படுகிறது.

ஆய்வு

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பிஜான் வர்கீஸ், பூண்டி சத்யமூர்த்தி நீர்த்தேக்கத்தை இன்று (ஜூன் 30) ஆய்வு மேற்கொண்டார். அப்போது இணைப்பு கால்வாய் வழியாக மற்ற ஏரிகளுக்கு நீர் அனுப்பும் முறை மற்றும் ஏரியின் நீர் இருப்பு, அணைகளின் நீர்மட்டம், மக்களின் பயன்பாடு ஆகியவை குறித்து ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம், உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவிப் பொறியாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: 'வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் கனமழை'

ABOUT THE AUTHOR

...view details