திருவள்ளூர் மாவட்டம், ஊராட்சி ஒன்றியம், அயத்தூர் ஊராட்சி, திருவள்ளூர் நகராட்சி, ஜெயா நகர் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கரோனா வைரஸ் தொற்று கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் திடீர் ஆய்வு மேற்க்கொண்டார். ஆய்வின்போது மருத்துவ முகாமிற்கு வருகை புரியும் பொதுமக்களின் விவரம் அடங்கிய பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா, காய்ச்சல் பாதித்தவர்களின் வீடுகளுக்கு சென்று விவரங்கள் சேகரிக்கப்படுகிறதா? போன்றவற்றை சம்பந்தப்பட்ட மருத்துவ அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
பரிசோதனை முகாமினை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் - மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருவள்ளூர்: ஊராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கரோனா வைரஸ் தொற்று கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் மேற்கொண்டார்.
District Collector inspecting the Corona test camp
மேலும் முழு வீச்சில் களப்பணி ஆற்ற உரிய அறிவுரைகள், உத்திரவுகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இந்த ஆய்வுகளின்போது திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலர், திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சந்தானம், மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.