தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரையோர மக்களுக்கு திருவள்ளூர் ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை - கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு

திருவள்ளூர்: கொசஸ்தலை ஆறு, திருத்தணி, பள்ளிப்பட்டு வட்டங்களைச் சேர்ந்த கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

water
water

By

Published : Nov 26, 2020, 6:42 PM IST

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்குள்பட்ட தமிழ்நாடு எல்லைக்கு அருகில் உள்ள ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அம்மா பள்ளி அணையில் இன்று (நவம்பர் 26) நண்பகல் முதல் 1,100 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இந்தத் தண்ணீர் தமிழ்நாடு எல்லையில் உள்ள பள்ளிப்பட்டு, கொசஸ்தலை ஆற்றில் கலந்து சானாகுப்பம், கிழ்கால்பட்டறை, நெடியம் ஆகிய பகுதி ஆற்றுப் பாலங்களைக் கடந்து மீண்டும் ஆந்திர மாநிலம் நகரி, லவகுசா ஆற்றின் வழியாக திருத்தணி தாலுகா, நல்லாட்டூர், என் கண்டிகை வழியாக பூண்டி அணை வரை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா வெள்ள அபாய எச்சரிக்கைவிடுத்துள்ளார். இந்தப் பகுதிகளில் ஆடு, மாடுகளை நீர்நிலைப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என்றும் கொசஸ்தலை ஆற்றை பொதுமக்கள் கடக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details