தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட இரண்டு அணுகுண்டுகள் கண்டெடுப்பு! - பிரிட்டிஷ்காரர்கள் பயன்படுத்திய அணுகுண்டுகள்

திருவள்ளூர்: பூண்டி அருகே உலகப்போரின்போது பிரிட்டிஷ்காரர்கள் வீசிய இரண்டு அணுகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Bomb
Bomb

By

Published : Aug 25, 2021, 10:20 AM IST

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட ராமாநாதபுரம் பகுதியில் லட்சுமி - வெங்கடரமணா என்பவருக்குச் சொந்தமான நிலம் உள்ளது.

இந்நிலத்தில் விறகுவெட்டிக் கொண்டிருந்த நபர்கள் இரண்டு அணுகுண்டு தோற்றம் கொண்ட பொருள்களைக் கண்டெடுத்தனர். இதுகுறித்து அவர்கள் காவல்துறையினருக்கும் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்களும் வருவாய்த்துறை அலுவலர்களும் அணுகுண்டுகளைக் கைப்பற்றி வெடிகுண்டு நிபுணர்களிடம் ஒப்படைத்தனர்.

இந்தப் பகுதியில் உலகப்போரின்போது பிரிட்டிஷ்காரர்கள் பயிற்சி செய்ததாகவும், ஒரு சில குண்டுகள் இப்பகுதியில் விழுந்திருக்கலாம் என்றும் அப்பகுதியைச் சேர்ந்த உலகப் போர் காலத்து பெரியவர் ஒருவர் தகவல் தெரிவித்தார்.

ராமாபுரம் பகுதியில் இதேபோன்று 20க்கும் மேற்பட்ட அணு குண்டுகள் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details