திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம், பவானி அம்மன் கோயில் அருகே தனியார் விடுதிகள் இயங்கி வருகின்றன. முன்னதாக இங்கு சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது, மண்ணில் இரும்பாலான துருப்பிடித்த வெடிகுண்டு போன்ற பொருள் ஒன்று புதைந்திருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
பல ஆண்டுகளாக மண்ணில் புதையுண்டு இருந்த வெடிகுண்டு கண்டெடுப்பு! - மண்ணில் புதைந்திருந்த வெடிகுண்டு கண்டெடுப்பு
திருவள்ளூர்: பெரியபாளையத்தில் பல ஆண்டுகளாக மண்ணில் புதையுண்டு இருந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து காவல் துறையினர் அதை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தத் தகவலையடுத்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று தோண்டியதில், சிதைந்த நிலையிலிருந்த வெடிகுண்டை மீட்டனர். இது பழங்காலத்தில் ராக்கெட் லாஞ்சர் போன்றவற்றில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனக் காவல் துறையினர் சந்தேகம் தெரிவித்த நிலையில், கும்மிடிப்பூண்டியில் வெடிகுண்டுகளை பாதுப்பாக வெடித்து செயலிழக்க வைக்கும் நிபுணர்கள் வந்து அந்த வெடிகுண்டை எடுத்துச் சென்றனர். தொடர்ந்து இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, 13 ஆண்டுகளுக்கு முன்கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் உள்ள இரும்பு உருக்காலைகளில் ஆயிரத்து 628 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. சுமார் 800க்கும் மேற்பட்ட இந்த வெடிகுண்டுகள் ராணுவ அலுவலர்கள் முன்னிலையில், ஈகுவார்பாளையத்தை அடுத்த ராமசந்திரபுரத்தில் பாதுகாப்பாக செயலிழக்க வைக்கப்பட்டன. இந்த நிலையில் பெரியபாளையம் பகுதியில் சிதைந்த நிலையில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.