தமிழ்நாட்டில் மழை, வெள்ளம், கட்டட இடிபாடுகளில் சிக்கும் நபர்கள் என அனைவரையும் உயிரைப் பயணம் வைத்து தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர் மீட்டு வருகின்றனர். நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் 850 வீரர்கள் மீட்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
வட கிழக்குப் பருவ மழைத் தொடங்கியுள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் தண்ணீரில் சிக்குபவர்கள், படகில் செல்லும் போது கவிழ்ந்து சிக்குபவர்கள், ஆற்றில் அடித்துச் செல்பவர்கள் ஆகியோர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்தும்; முதலுதவி அளிப்பது, மீட்புப் படையினர் இல்லாதபோது தனக்குத் தானே எப்படிக் காப்பாற்றிக் கொள்வது குறித்தும் சிறப்பு ஒத்திகை நிகழ்ச்சியை பூண்டி ஏரியில் நடத்திக் காட்டினார்கள்.