தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழவேற்காட்டில் பேரிடர் ஒத்திகை பயிற்சி! - பழவேற்காட்டில்

திருவள்ளூர்: பழவேற்காட்டில் 13 கடற்கரை கிராமங்களில் உள்ள மக்களுக்கு பொன்னேரி கோட்டாட்சியர் தலைமையில் பேரிடர் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

பழவேற்காட்டில் பேரிடர் ஒத்திகை பயிற்சி!

By

Published : Aug 5, 2019, 9:21 AM IST

தமிழ்நாட்டில் உள்ள கடலோர மாவட்டங்களில் பேரிடர் ஒத்திகை பயிற்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் 13 கடற்கரை கிராமங்களில் உள்ள மக்களுக்கு பேரிடர் ஒத்திகை பயிற்சி, பொன்னேரி கோட்டாட்சியர் நந்தகுமார் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வில், ஒலிப் பெருக்கி மூலம் அங்குள்ள கிராமங்களில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதனையடுத்து, பேரிடர் மீட்பு குழுவினர் அப்பகுதி மக்களை மீட்டு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் ஏற்றி ஆண்டார்மடம் அருகே உள்ள பேரிடர் பாதுகாப்பு மையத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் தண்ணீரில் தத்தளித்தவர்களை மீட்கும் ஒத்திகை, கால்நடைகள் மீட்பு ஒத்திகை, மாடி வீடுகள் மேலிருந்த மக்களை மீட்கும் ஒத்திகை மற்றும் பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து பணியாளர்களை காப்பாற்றும் ஒத்திகை போன்றவைகள் நடைபெற்றன.

பழவேற்காட்டில் பேரிடர் ஒத்திகை பயிற்சி!

இந்நிகழ்ச்சி நேற்று காலை தொடங்கி மாலை வரை நடைபெற்றது. இதில் வருவாய்த்துறையினர், காவல்துறையினர், அரசு அலுவலர்கள், தீயணைப்புத்துறையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் 283 பேர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details