தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டம் தமிழனத்தை அழிக்கும் - இயக்குநர் கெளதமன்! - சிஏஏ போராட்டம்

திருவள்ளுர்: குடியுரிமை திருத்தச் சட்டம் ஐம்பதாயிரம் ஆண்டு கால வரலாறு படைத்த தமிழ் இனத்தையே கூண்டோடு அழிக்கும் என்று திரைப்பட இயக்குநர் கௌதமன் தெரிவித்தார்.

Director Gowthaman condemns speech against CAA
Director Gowthaman

By

Published : Mar 14, 2020, 10:10 AM IST

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்துக்கு ஜாஹிர் உசேன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் பங்கேற்ற திரைப்பட இயக்குநர் கௌதமன் பேசியதாவது," மத்திய அரசு மக்களை பிளவுபடுத்தும் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த நினைக்கிறது.

இந்தச் சட்டம் இஸ்லாமியர்களை மட்டும் பாதிக்கும் என, சரியாக புரிதல் இல்லாமல் பலர் இருக்கின்றனர். அனைத்து தரப்பு மக்களையும், இச்சட்டம் மிகக் கடுமையாக பாதிக்கும். முதலில் இஸ்லாமியர்களையும், அடுத்து கிறிஸ்தவர்களையும், அதற்கு அடுத்து பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்களையும், வேரறுக்க மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழனத்தையே குடியுரிமை திருத்தச் சட்டம் அழிக்கும்.

இறுதியாக 50 ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட தமிழ் இனத்தை கூண்டோடு அழிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எனவே இந்தச் சட்டத்துக்கு எதிராக அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்றார்.

இதையும் படிங்க:'நீங்கள் ஆண்டதால்தான் நாங்கள் தெருவில் நிற்கிறோம்'- ராதாரவிக்கு கௌதமன் பதிலடி!

ABOUT THE AUTHOR

...view details