திருவள்ளூர்: திமுக எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரனுக்கு பாண்டூர் பகுதியில் இந்திரா கல்விக் குழுமத்தில் மருத்துவம், பொறியியல், நர்சிங் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
கடந்த 20 நாள்களுக்கு முன்பு திமுக எம்எல்ஏ-வின் நர்சிங் கல்லூரியில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவியா என்பவர் முதலாமாண்டு சேர்ந்துள்ளார்.
முதலில் காவியா நர்சிங் படிக்க அரசு கல்லூரியில் விண்ணப்பித்துள்ளார். ஆனால் கிடைக்காத பட்சத்தில் திமுக எம்எல்ஏ-வின் நர்சிங் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.
இந்நிலையில் வருகிற 17 ஆம் தேதி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கல்லூரியில்கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான அழைப்பு கடிதம் காவியாவுக்கு வந்துள்ளது.
அங்கு செல்வதற்காக மாற்று சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் கேட்டு திமுக எம்எல்ஏ-வின் நர்சிங் கல்லூரியில் காவியா விண்ணப்பித்துள்ளார்.