தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்வழிப் பாடநூல் - திண்டுக்கல் ஐ. லியோனி

உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்குத் தமிழ்வழிப் பாடநூல் அச்சிடும் பணி தொடங்கவுள்ளதாகத் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி தெரிவித்துள்ளார்.

உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்வழி பாடநூல்
உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்வழி பாடநூல்

By

Published : Jul 20, 2021, 4:48 PM IST

திருவள்ளூர்: தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக திண்டுக்கல் ஐ. லியோனி அண்மையில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் திருவள்ளூரில் பாடப்புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கில் அவர் ஆய்வுசெய்தார்.

அப்போது அவருடன் சட்டப்பேரவை உறுப்பினர் விஜி ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஐ. லியோனி கூறியதாவது, "மாநிலம் முழுவதும் உள்ள இடங்களில் ஆய்வு மேற்கொண்டுவருகிறேன். திருவள்ளூர் கிடங்கிலிருந்து 860 பள்ளிகளுக்குப் புத்தகங்கள் அனுப்பும் பணி நடைபெற்றுவருகிறது. இதுவரை 400 பள்ளிகளுக்குப் புத்தகங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்குத் தமிழ்வழிப் பாடநூல்

ஆங்கில வழியில் மருத்துவம், பொறியியல் படிக்கும் மாணவர்களின் சிரமத்தை உணர்ந்து, தமிழ்வழிப் பாடநூல் அச்சிடும் பணி தொடங்க உள்ளது" என்றார்.

இதையும் படிங்க: தொழிற்கல்விப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை?

ABOUT THE AUTHOR

...view details