திருவள்ளூரில் இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடந்து வந்தது. மூன்றாவது நாளான இன்றைய (டிசம்பர் 16) போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இப்போராட்டத்திற்கு திருவள்ளூர் மனிதம் அறக்கட்டளை சார்பில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்
ஆட்சியர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீர் சாலை மறியல் செய்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த காவலர்கள் விவசாயிகளை தடுத்து நிறுத்தினர்.