திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஆத்துப்பக்கம் ஊராட்சியில் வசித்து வருபவர், பட்டியலினப் பெண்மணி அமிர்தம். அவர் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், சுழற்சி அடிப்படையில் ஊராட்சி மன்றத் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பட்டியலினப் பெண் ஊராட்சி மன்றத் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால், அப்பகுதி ஆதிக்க சாதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஹரிதாஸ் என்பவர், அமிர்தத்திற்கான ஊராட்சி மன்றத் தலைவர் அதிகாரங்களுக்கு மறுப்பும், எதிர்ப்பும் தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
முன்னதாக அதுமட்டுமல்லாமல் அவரும், அலுவலக எழுத்தர் சசிகுமார் என்பவரும் சேர்ந்து அமிர்தத்தை குடியரசு தினத்தில் தேசியக் கொடியை ஏற்ற அனுமதி மறுத்தது; கிராம சபைக் கூட்டத்தில் தலைமை ஏற்க அனுமதி மறுத்தது; ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பெயர் பொறிக்க அனுமதி மறுத்தது; பஞ்சாயத்து கணக்கீடுகள் குறித்த கேள்விகள் கேட்க அனுமதி மறுத்தது எனப் புறக்கணித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவி இந்த நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனால் விரக்தி அடைந்த அமிர்தம், மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஹரிதாஸ், அலுவலக எழுத்தர் சசிகுமார் இருவர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென புகார் அளிக்கயிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:பட்டியலினத்தின் இடஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும்: மாயாவதி!