தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு - Vote Counting

திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்தி சேகரிக்க செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை மையம்
வாக்கு எண்ணிக்கை மையம்

By

Published : Oct 12, 2021, 5:49 PM IST

திருவள்ளூர்மாவட்டத்தில் இருந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் செய்தி சேகரிக்க செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில், காலியாக இருந்த 4 ஊராட்சித் தலைவர்கள், 4 கவுன்சிலர்கள், 30 வார்டு உறுப்பினர்களுக்கான இடைத்தேர்தல் கடந்த 9ஆம் தேதி நடைபெற்றது.

அதில் 13 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மாவட்டத்தின் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இன்று காலை முதல் வாக்கு எண்னிக்கை நடந்து வருகின்றது.

மீஞ்சூர் ஒன்றிய அலுவலகத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் வழக்கம்போல செய்திகள் சேகரிக்க சென்ற செய்தியாளர்களுக்கு, அங்கு செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டது.

இதேபோல, பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் செய்தியாளர்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பருவ மழையை எதிர்கொள்ள தயார் - மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி

ABOUT THE AUTHOR

...view details