திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு மற்றும் இதர காய்ச்சல்களை கட்டுப்படுத்த பொது சுகாதாரத்துறை, ஊரக உள்ளாட்சித்துறை, நகர்புற உள்ளாட்சித் துறைகள் சார்பாக டெங்கு கொசு ஒழிப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது.
ஆய்வுக்கூட்டத்தில், டெங்கு மற்றும் இதர தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள் , மாநகராட்சி ஆணையர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், டெங்கு கொசுக்களை ஒழித்திடும் பொருட்டு மேற்கொள்ளப்படும் புகை மருந்து தெளிக்கும் பணிகள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், சிறு மின்விசை பம்பு தொட்டிகள் வாரம் ஒரு முறை கழுவி சுத்தம் செய்வதையும், தினசரி வழங்கப்படும் குடிநீர் குளோரினேஷன் செய்து வழங்குவது உறுதி செய்ய வேண்டும்.