தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’மருத்துவர் சீட்டு இல்லாமல் மருந்து வழங்கினால் நடிவடிக்கை’ - மருந்துக் கடைகளுக்கு எச்சரிக்கை - dengue inspection poonamallee

சென்னை: மருத்துவரின் மருந்துச் சீட்டு இல்லாமல் மருந்து வழங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை இணை இயக்குநர் கிருஷ்ணராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

dengue

By

Published : Nov 8, 2019, 11:48 PM IST

பூவிருந்தவல்லி நகராட்சிக்கு உட்பட்ட 14ஆவது வார்டில் தமிழ்நாடு சுகாதாரத்துறை இணை இயக்குநர் கிருஷ்ணராஜ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு வீடுவீடாகச் சென்று டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் உள்ள நோயாளிகளைச் சந்தித்து அவர் நலம் விசாரித்தார். மக்களிடம் கொசு உற்பத்தியைத் தடுக்க விழிப்புணர்வோடு இருக்கவேண்டும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழ்நாட்டில் பனிக்காலம் தொடங்கி உள்ளதால் டெங்கு காய்ச்சல் படிப்படியாக குறைந்துள்ளது. தற்போது 20 சதவீதம் தான் காய்ச்சல் உள்ளதாக தெரிவித்தார். அதனையும் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.

பூவிருந்தவல்லியில் டெங்கு விழிப்புணர்வு ஆய்வு

காய்ச்சல் ஏற்பட்டவர்களுக்கு மருந்துக் கடைகளில் மருத்துவரின் அனுமதி சீட்டு இல்லாமல் மருந்துகள் வழங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். டெங்கு அறிகுறி இருந்தால் அரசு மருத்துவமனையை தான் அணுகவேண்டும் என்றும், அருகாமையில் உள்ள மருத்துவர்களிடம் செல்லவேண்டாம். மேலும், டெங்கு அறிகுறியுடன் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு 7 நாள் சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: டெங்கு ஒழிப்பில் மும்முரம் காட்டும் சுகாதாரத்துறை!

ABOUT THE AUTHOR

...view details