தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆவடி அருகே மர்ம காய்ச்சலுக்கு ஏழு வயது சிறுவன் உயிரிழப்பு! - அயப்பாக்கம் ஊராட்சியில் டெங்கு பாதிப்பு அதிகம்

சென்னை: ஆவடி அடுத்த அயப்பாக்கத்தில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏழு வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

டெங்கு பாதிப்பு தீவிரம்

By

Published : Oct 2, 2019, 2:33 PM IST

சென்னை ஆவடியை அடுத்த அயப்பாக்கம் ஊராட்சியில், வசித்து வருபவர்கள் மணிமாறன், பவானி தம்பதியினர். இவர்களின் மகன் இனியன் (7). கடந்த சில தினங்களாகவே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இனியன் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்த சூழலில் காய்ச்சல் தீவிரமானதைத் தொடர்ந்து அச்சிறுவனின் பெற்றோர் நேற்று சிறுவனை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் அங்கு சிகிச்சை பலனளிக்காததால் இனியன் உயிரிழந்தார்.

அயப்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள தெருக்களில் குப்பைகள் அகற்றப்படாததாலும், தெருக்களில் கழிவுநீர் ஆறாக ஓடுவதாலும், ஏராளமான கொசுக்கள் உற்பத்தியாகி வீடுகளுக்குள் படையெடுத்து வருகின்றன. இதனால் அப்பகுதியில் வசிக்ககூடிய பலரும் டெங்கு, சிக்கன் குனியா போன்ற மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதனால் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டிவரும் சுகாதரத் துறை அலுவலர்களை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொதுநலச்சங்கங்கள் எச்சரிக்கின்றன.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details