நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் - நீட் தேர்வு
திருவள்ளூர்: மத்திய அரசு நீட் தேர்வை ரத்து வேண்டும் என வலியுறுத்தி மாணவர் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மத்திய அரசு மாணவர்களின் தற்கொலைக்கு காரணமான நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என வலியுறுத்தி, மாணவர் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஏழை மாணவர்களின் மருத்துவராகும் கனவினை தகர்க்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். சமஸ்கிருதம், மறைமுக இந்தித்திணிப்பு நடவடிக்கையையும் மத்திய அரசு கைவிட வேண்டும். மாணவர்களின் நலனில் அக்கறை இல்லாமல் மத்திய அரசுக்கு துணைபோகும் மாநில அரசுக்கு எதிராகவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.