திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த குறிஞ்சி ரெட்டிப்பாளையம் பகுதியில் போலீசார் இன்று அதிகாலை 3 மணி அளவில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியாக வந்த பொலிரோ காரை சோதனை செய்தபோது அதில் நாட்டுத் துப்பாக்கிகளும், சுடப்பட்டு இறந்த நிலையில் இருந்த ஆண் மான் ஒன்றும் இருந்துள்ளது.
மானை வேட்டையாடிய 4 பேர் கைது - dear poaching four person arrest thiruvallur
திருவள்ளூர்: நாட்டுத்துப்பாக்கியால் மானை வேட்டையாடி கொன்ற நான்கு பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
திருவள்ளூர்
இதனைத் தொடர்ந்து வாகனத்தில் வந்த எருக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்த நரசிம்மன் விச்சூர் பகுதியை சேர்ந்த நாகராஜ், மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த பரணிதரன் தமிழ்ச்செல்வன் ஆகிய நால்வரை மீஞ்சூர் போலீசார் கைதுசெய்தனர்.
இதனையடுத்து உயிரிழந்த ஆண் மான் மற்றும் குற்றத்தில் ஈடுபட்ட நால்வர் மற்றும் அவர்கள் பயன்படுத்திய காரை வனத்துறை அலுவலர்களிடம் மீஞ்சூர் காவல் துறையினர் ஒப்படைத்தனர்.