தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்ரீ வீரராகவா பெருமாள் கோயில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்: பக்தர்கள் அதிர்ச்சி - ஸ்ரீ வீரராகவா பெருமாள் கோயில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்

புனித நீராகக் கருதப்படும் ஸ்ரீவீரராகவா பெருமாள் கோயில் குளத்தில் மீன்கள் செத்து மிதந்து துர்நாற்றம் வீசியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஸ்ரீ வீரராகவா பெருமாள் கோயில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்
ஸ்ரீ வீரராகவா பெருமாள் கோயில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்

By

Published : Jan 19, 2022, 5:18 PM IST

திருவள்ளூர்:திருவள்ளூர், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு திருவள்ளூரில் அமைந்துள்ள ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோயில் பிரசித்திப் பெற்று விளங்கிவருகிறது.

அமாவாசை நாள்களிலும் பல ஆயிரக்கணக்கில் பக்தர்கள் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து செல்வதுடன், மறைந்த தங்களது மூதாதையர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோயில் குளத்தில் உள்ள நீரை தீர்த்தமாகக் கொண்டுசெல்கின்றனர்.

இந்நிலையில் வீரராகவ பெருமாள் கோயில் குளம் அசுத்தமடைந்து தற்பொழுது அதிக அளவிலான மீன்கள் செத்து மிதக்கின்றன. புனித நீர் அசுத்தமடைந்துள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஸ்ரீ வீரராகவா பெருமாள் கோயில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்
மேலும் கோயில் குளம் நெகிழி உள்ளிட்ட குப்பைகளால் நிரம்பி கொசுக்கள் உற்பத்தியாகியுள்ளதால் உடனடியாகச் சுத்தம்செய்ய கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் புதிய காவல் ஆணையம் - ஸ்டாலின் உத்தரவு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details