தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்விரோதம்: டான்சருக்கு சரமாரி சதக்... சதக்...!

திருவள்ளூர்: முன்விரோதம் காரணமாக நடனக் கலைஞர் ஒருவரை கூலிப்படை வைத்து கொலை செய்ய முயன்ற சம்பம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

murder

By

Published : Aug 6, 2019, 5:03 PM IST

திருவள்ளூர் மாவட்டம் தங்கானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு. இவர் நடனக் கலைஞராக உள்ளார். இந்நிலையில், பிரபு இருசக்கர வாகனத்தை தெருவில் ஓட்டிச் சென்றபோது பார்த்திபன், தமிழரசன் ஆகியோருடன் தகராறு ஏற்பட்டது.

இந்தத் தகராறுக்கு பழிதீர்க்கும்விதமாக பார்த்திபன், தமிழரசன் ஆகியோர் பிரபுவை கூலிப்படை உதவியுடன் அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

இதில் பிரபு அலறவே கூலிப்படையினர் தப்பி ஒடினார். அருகில் இருந்தவர்கள் பிரபுவை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின் இது குறித்து புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவரை கூலிப்படையினரை அழைத்து வந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details