திருவள்ளூர்மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் அதன் மொத்த உயரமான 35 அடியில், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவினைக்கொண்டது. இந்த நீர்த்தேக்கத்தில் சென்னை மக்களின் குடிநீர் தேவையைக்கருத்தில்கொண்டு, கூடுதலாக 1.5 டிஎம்சி தண்ணீரை சேமிக்கும் வகையில் அதன் உயரத்தை அதிகரிக்க உலக வங்கியின் ஆலோசகர் சூப்பே குழுவினருடன் நீர்வளத்துறைப்பொறியாளர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.
மேலும் அணையின் பாதுகாப்பு அணையில் இருந்து தண்ணீரை புழல், செம்பரம்பாக்கம் மற்றும் சோழவரம் ஏரிகளுக்கு அனுப்பும் முறைகள் மற்றும் கொசஸ்தலை ஆற்றின் நீர்வரத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் நீர்வளத்துறை தலைமைப்பொறியாளர் முரளிதரன் உள்ளிட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகளை பாலாறு வடிநில வட்ட கண்காணிப்புப் பொறியாளர் முத்தையா, திருவள்ளூர் உதவி செயற்பொறியாளர் சத்திய நாராயணா, கொசஸ்தலை வடிநில வட்ட கண்காணிப்புப் பொறியாளர் பொதுப்பணி திலகம் உள்ளிட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.