தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளூரில் 'திஷா' அலுவலகத்தை திறந்து வைத்த பால்வளத்துறை அமைச்சர் - Thiruvallur district collector

திருவள்ளூர் மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் கண்காணிப்புக் குழு அலுவலகத்தை தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.

திஷா அலுவலகத்தை திறந்து வைத்த பால்வளத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர்
திஷா அலுவலகத்தை திறந்து வைத்த பால்வளத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர்

By

Published : Jun 17, 2021, 5:51 PM IST

தமிழ்நாடு அரசின் வளர்ச்சித் திட்டங்கள் உரிய முறையில் பயனாளிகளை சென்று சேர்கிறதா என்பதை ஆய்வு செய்யவும், திட்டங்களை ஒருங்கிணைத்து மக்களுக்கு கொண்டு சேர்க்கவும் 'திஷா' என்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்புக் குழு மற்றும் கண்காணிப்பு குழு அலுவலகம் உருவாக்கப்பட்டு, சமூகத்தின் மீது அக்கறை கொண்டு பணிகளை செய்பவர்கள் குழுவில் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர்.

குழுவின் தலைவராக சமூக சேவகர்

அந்த குழுவின் தலைவராக சமூக சேவகர் திருவள்ளூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களாக மாவட்டத்திலுள்ள தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் சிறுபான்மை தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.

திஷா' அலுவலகத்தை திறந்து வைத்த பால்வளத்துறை அமைச்சர்

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவவளாகத்தில் ‘திஷா’ அலுவலகத்தை தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பிஜான் வர்கீஸ் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இதையும் படிங்க:'காணாமல்போன கோயில் சிலைகளைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுங்கள்' - உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details