திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் ஊரடங்கு உத்தரவு காரணமாக திமுகவின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் ஏசுராஜன் கலைமணி இல்லத் திருமண நிகழ்ச்சி மிக எளிமையாக, சமூக இடைவெளியைப் பின்பற்றி நடைபெற்றது.
இத்திருமண வரவேற்புக்கு இரு வீட்டாருக்கும் முகக் கவசம் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது. மணமக்கள் கெசீன்-சாருலதா ஆகியோர் திமுக மீஞ்சூர் ஒன்றியச் செயலாளர்கள் என். எஸ். கே. ரமேஷ் ராஜ், சுகுமாரன், ஒன்றிய சேர்மன் ரவி ஆகியோர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டு, ஆசி பெற்றனர்.